Q-Fever.png

கியூ-காய்ச்சல்

காக்சில்லா புர்னெத்தி பாக்டீரியாவால் (coxiella burnetii bacteria) கியூ-காய்ச்சல் உண்டாகிறது. அதிகக் காய்ச்சல், தசைவலி, தலைவலி ஆகிய சளிக்காய்ச்சல் அறிகுறிகளை அது ஏற்படுத்துகிறது. சிறிய வித்து போன்ற உயிரணுத்-திரிபை உள்ளிழுப்பதாலும், தொற்றுள்ள விலங்குகளின், சிறுநீர், மலம், பிறப்புறுப்பு கழிவுகள் அல்லது விந்து போன்றவற்றுடன் தொடர்பு ஏற்படும்போதும் தொற்று பரவுகிறது. அபூர்வமாக இந்நோய் உண்ணிப் பரவி என்றும் அறியப்படும்.

கியூ-காய்ச்சலில் உள்ள Q, வினாவைக் (query) குறிக்கிறது. முதன் முதலில் இந்நோய் இனங்காணப்பட்ட போது அதற்கான காரணம் அறியப்படவில்லை. தற்போது காரணம் அறியப்பட்டாலும் பெயர் அவ்வாறே நிலைத்துவிட்டது.

குறிப்புகள் : www.cdc.gov 
www.nlm.nih.gov 
www.nhs.uk

நோயரும்புகாலம் பொதுவாக இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும். இலேசான சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இது வெளிப்படும்.

  • காய்ச்சல்
  • உடல்சோர்வு
  • அதிக வியர்வை
  • கடும் தலைவலி
  • தசைவலி
  • மூட்டு வலி
  • பசியின்மை
  • மேல் மூச்சு மண்டலக் கோளாறுகள்
  • வறட்டு இருமல்
  • நுரையீரல் படல வலி
  • குளிர்
  • மனக்குழப்பம்
  • குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு. இந்தக் காய்ச்சல் ஏறக்குறைய 7-14 நாட்கள் நீடிக்கும்.

குறிப்பு: www.nhs.uk

காக்சில்லா புர்னெத்தி பாக்டீரியாவால் (அல்லது c- புர்னெத்தி) கியூ-காய்ச்சல் ஏற்படுகிறது. பாக்டீரியா தொற்றுள்ள விலங்குகளினால் பொதுவாக இந்நோய் பரவுகிறது.

பரவலாக பாதிக்கப்படுவதும், மனிதர்களுக்கு ஆபத்தானதுமான விலங்குகள்:

  • செம்மறி ஆடுகள்
  • மாடுகள்
  • வெள்ளாடுகள்
  • நாய், பூனை, கினிப்பன்றிகள் போன்ற வீட்டு விலங்குகள்

குறிப்பு: www.nhs.uk

இரத்தப்பரிசோதனை மூலம் கியூ-காய்ச்சலைக் கண்டறியலாம்.

இரத்தப்பரிசோதனை: கியூ-காய்ச்சலை உருவாக்கும் புர்னெத்தி பாக்டீரியா இரத்தத்தில் இருந்தால் நோய்த்தடுப்பு மண்டலம் எதிர்பொருட்களை உண்டாக்கும்.

டாக்சிசைக்ளின் அல்லது டெட்ராசைக்ளின் போன்ற நுண்ணுயிர்க் கொல்லிகளைக் கியூ-காய்ச்சலுக்கு பயன்படுத்தலாம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு, டாக்சிசைக்ளினும் சிப்ரோஃபிளாக்சாசினும் கர்ப்பகாலத்தில் முரண்குறிகளைக் காட்டலாம். இதற்காக ஐந்து வாரங்களுக்கு, கோ-டிரைமோக்சாசோல் சிகிச்சை அளிக்கப்படும்.

  • PUBLISHED DATE : Apr 21, 2015
  • PUBLISHED BY : NHP CC DC
  • CREATED / VALIDATED BY : NHP Admin
  • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.